சந்திரயான்-3 விண்கலத்தை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த வரலாற்று மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சாதனைக்காக இலங்கை பெருமை கொள்கிறது என்று கூறிய விக்கிரமசிங்க, இந்த சாதனையை அனைத்து மனிதகுலத்திற்கும் அர்ப்பணிக்கும் பிரதமர் மோடியின் தாராளமான சைகை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தொடர அடுத்த தலைமுறைகளை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார்.
மேலும், ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தில் “நிலவின் வாகனம்” என்று பொருள்படும் இந்திய விண்கலமான சந்திரயான் – 3 நேற்று சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி சரித்திரம் படைத்துள்ளதாகவும் அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்தார்.