வாகன இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமான முறையில் பாரியளவிலான வாகனங்கள் நாட்டுக்குள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் பலர் இணைந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
சுமார் 5000 வாகனங்கள் இவ்வாறு சட்டவிரோதமாக நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவற்றில் 200 வாகனங்கள் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகியுள்ளதாகவும் ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஆறு சந்தேகநபர்கள் பற்றிய தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மோசடி சில காலமாக இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது.