ஐ.நா புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி – சஜித் விசேட சந்திப்பு!

ஐ.நா.வின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ரோ பிராஞ்சை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதி நாட்டில் தனது பணியை ஏற்றுக்கொண்டதன் நிமித்தமே இச்சந்திப்பு இடம்பெற்றது.

நாட்டின் பல்வேறு சமூக பொருளாதார அரசியல் விடயங்கள் தொடர்பாக இரு தரப்புக்கும் இடையில் இதன்போது பல கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

நாட்டில் நிலவிவரும் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐ.நாவின் புதிய நிரந்தர வதிவிடப் பிரதிநிதிக்கு தெரியப்படுத்தினார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஜனநாயக உரிமைகளை மீறி தேர்தல்களை ஒத்திவைத்து அடிப்படை உரிமைகளை மீறி வருவது தொடர்பாகவும் அவர் மேலும் தெரியப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply