இலங்கை பொலிஸ் தினத்தை வடமாகாணத்தில் இவ்வருடம் சிறப்பாக கொண்டாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வடமாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சர்வ மத ஸதலங்களிலும் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
157 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டே குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 3 ஆம் திகதி காலை 7 மணிக்கு யாழ் சென்ஜோன்ஸ் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனைகள் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 10.30 மணிக்கு நைனாதீவு பௌத்த விகாரையில் சிறப்பு வழிபாடுகள் இடமபெறவுள்ள நிலையில், யாழ்ப்பாணம் கீரிமலை இந்து ஆலயத்திலும் பூஜை வழிபாடுகள் மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து நண்பகல் 12 மணிக்கு ஜூம்மா பள்ளி வாசலில் வழிபாடுகள் இடமபெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து யாழ் நாகவிகாரையில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.