பொதுமக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள கோரிக்கை!

ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி பணம் மற்றும் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து மோசடியில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அந்த அமைப்பின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்கள், குறுஞ்செய்தி சேவைகள், இணையத்தளங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் பெயர் மற்றும் சின்னத்தைப் பயன்படுத்தி இடம்பெறும் மோசடிகள் தொடர்பில் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை தமது ஆட்சேர்ப்பு செயல்முறையில் எந்த சந்தர்ப்பத்திலும் கட்டணம் வசூலிப்பதில்லை எனவும் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply