சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – தாதிக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்று பயண தடை விதித்துள்ளது.

காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 8 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கனுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் கை பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன், அகற்றப்பட்டது.
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம், வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் சார்பில் மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply