மீண்டும் வலுப்படும் கியூபா-இலங்கை இராஜதந்திர உறவு – டியாஸ் கேனல் ரணில் சந்திப்பு!

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஹவானாவில் கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஹவானாவில் நடைபெறவுள்ள ஜி77 மற்றும் சீன உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவுக்கு சென்றுள்ளார்.

கியூபா ஜனாதிபதி மிகுவல் டியாஸ் கேனலின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறித்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார்.

“தற்போதைய வளர்ச்சி சவால்கள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் இந்த உச்சி மாநாடு இன்றும் நாளையும் ஹவானாவில் நடைபெறவுள்ளது.

உச்சிமாநாட்டுடன், இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது, இலங்கைக்கும் கியூபாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த இரு தலைவர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

கியூபா ஜனாதிபதி  மிகுவல் டியாஸ் கேனல் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் நட்பின் உறவுகளை எடுத்துரைத்தார்.

பொருளாதார மற்றும் வணிக உறவுகளை விரிவுபடுத்துவது குறித்தும் இருவரும் அவதானம் செலுத்தினர்.

ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான கோரிக்கைக்கு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் இலங்கை ஆதரவளித்தமைக்கு கியூபா ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply