மத்திய வங்கிச் சட்டம் நடைமுறை – ஆளுநரை நியமிக்க திறைசேரிக்கு அங்கீகாரம்!

புதிய மத்திய வங்கிச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம், இலங்கை மத்திய வங்கியின் பணத்தை அச்சிடும் திறன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலம் நேற்று முதல் சட்டமாக நடைமுறைக்கு வரும் வகையில், கடந்த ஜூலை மாதம் திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டம் இலங்கை மத்திய வங்கிக்கு அதன் சுதந்திரத்தை உறுதி செய்யும் போது பல்வேறு வழிகளில் அதிகாரம் அளிக்கிறது.

இந்த நிலையில், அண்மைக்காலமாக நாட்டின் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்திய விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் அதிகளவு பணத்தை அச்சிடுவதற்கு சட்டத்தின் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தேசிய பாதுகாப்பு அல்லது சுகாதார அவசர நிலையினைக் கையாளும் சந்தர்ப்பங்களின் போது மாத்திரம் பணத்தை அச்சிட முடியுமென பதில் நிதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய வங்கி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மத்திய வங்கியின் ஆளுநரை நியமிக்கும் நடவடிக்கையில் திறைசேரி ஈடுபட முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், தனிநபர் ஒருவர் மத்திய வங்கியின் ஆளுநராகச் செயல்படுவதற்குத் தேவையான தகுதிகளின் தொகுப்பை இந்தச் சட்டம் கொண்டுள்ளது.

மேலும், ஆளுநரை நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபையின் அங்கீகாரமும் அவசியமென மத்திய வங்கி சட்டம் சுட்டிக்காட்டுகிறது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply