மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இலங்கையில் குறிப்பிட்ட சிலருக்கே பாடசாலை சீருடை வழங்கப்படும் என பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

மேலும், 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சடித்து விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடத்தின் முதலாம் தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடசாலை பாடப் புத்தகங்கள் மாணவர்களுக்கு கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

சகல பாடத்திட்டங்களையும் உள்ளடக்கி மீளமைக்கவும், சகல பௌதீக வசதிகளை வழங்குவதுமே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் காலதாமதமாக இருந்த பாடப்புத்தகங்களை ஒப்பீட்டளவில் குறைந்த விலையில் அச்சிடுவதன் மூலம் இந்த வருடம் 4,000 மில்லியன் ரூபாவை அரசாங்கம் சேமிக்க முடிந்துள்ளது.

அரச அச்சகம், சட்டபூர்வமாக்கப்பட்ட கூட்டுத்தாபனம் தற்போது இலாபம் அடையும் நிலையை எட்டியுள்ளது. மேலும்,  எதிர்காலத்தில் அனைத்து பாடசாலை பாடப்புத்தகங்கள், பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் ஏனைய அரசாங்க ஆவணங்கள் அச்சிடுவதற்கு அந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு அதனை மேலும் அதிகரிப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நம்பகத்தன்மை மற்றும் தரநிலை என்பன இந்த அனைத்து நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களின் ஆதரவும் அர்ப்பணிப்பும் பாடசாலை அமைப்பில் மாற்றத்தை யதார்த்தமாக்குவதற்கு இன்றியமையாத காரணி என தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply