பருவகாலம்  அல்லாத நேரத்தில் ஸ்ரீ பாதத்தில் ஏறுவதற்கு விசேட வழிகள் திறக்கப்பட்டுள்ளன!

பருவகாலத்தில் ஸ்ரீ பாதத்தில் ஏறும் பக்தர்களுக்காக இரத்தினபுரி மற்றும் நல்லதண்ணி பாதைகள் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இரத்தினபுரி வழித்தடத்திற்கான பவனல்ல பொலிஸ் சோதனைச் சாவடி அமைந்துள்ள இடத்திலும், நல்லதண்ணி வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தில் நல்லதண்ணி வழித்தடத்திற்கான நுழைவுசீட்டு கொடுக்குமிடம் ஆகிய  இரண்டு இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

உரிய நுழைவுசீட்டு கொடுக்குமிடங்கள் மாலை 6.00 மணி முதல் மறுநாள் காலை 10.00 மணி வரை திறந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்ரீபாத சரணாலயத்திற்குள் நுழையும் யாத்ரீகர்கள் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் அவதானமாக இருப்பதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதேவேளை, குருவிட்ட, தெஹனகந்த மற்றும் மரிகொட ஆகிய பாதைகள் பருவகாலத்தில் மூடப்பட்டிருக்கும் என வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் பயணச்சீட்டு பெறாமல் ஸ்ரீபாத சரணாலயத்திற்குள் பிரவேசிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply