ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு சுயாதீன சபையின் கீழ் பணிகள் முன்னெடுக்கப்படும் என நம்புவதாக ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட மூன்று விதிமுறைகள் மற்றும் சிறப்புப் பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் உள்ள விதிகளை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துகொண்டபோது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன ஊழியர் சேமலாப நிதியின் சுயாதீன முகாமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அதற்கு பதிலளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.