நிறுத்தப்படவுள்ள கொக்குத்தொடுவாய் புதைகுழி அகழ்வு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கான போதியளவு நிதி இல்லை எனவும் இதனால் அகழ்வு பணிகள் நிறுத்தப்படக்கூடிய சூழல் காணப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலுள்ள பிரதான கணக்காளர் தெரிவித்துள்ளார்.

உடற்கூற்று பரிசோதனை முடிவுகளும் தாமதமாவதற்கான சாத்திக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர் நேற்று தெரிவித்தார்.

அதன்படி, கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி மீண்டும் ஆரம்பிக்கப்படாமல் நிறுத்தப்படக்கூடிய சூழலே காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகள் செப்டம்பர் 06ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு செப்டம்பர் 15ஆம் திகதி வரை இடம்பெற்றிருந்தன.

அகழ்வு பணியில் 17 எலும்புக்கூட்டுj; தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த அகழ்வுப்பணி இடைநிறுத்தி வைக்கப்பட்டது.

மேலும், ஒக்டோபர் மாதம் மூன்றாம் வாரத்தில் இதே குழுவினரால் இது மீள ஆரம்பிக்கப்படும் என முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply