இலங்கை இராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாக முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் அமைவதாக கொழும்பைச் சேர்ந்த சட்டத்தரணி மஹிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நீதிபதிக்கு நீதி வேண்டி யாழில் நேற்றைய தினம் இடம்பெற்ற மனித சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த அரசாங்கம், அல்லது இங்கு அரசாங்கத்தில் காணப்படும் தவறான தலைமைகள் திரைமறைவில் ஒரு மிகவும் தவறான காரியம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதனால் ஒரு மிகவும் நேர்மையான நீதிபதி பதவி விலகியுள்ளார். ,அதுமட்டுமல்லாது அவர் தனது உயிர் பயத்திற்காக நாட்டைவிட்டும் தப்பி சென்றுள்ளார்.
இது இங்கே வருத்தத்திற்குரிய விடயமாகும். எனவே இந்த சம்பவத்தின் பின்னணியில் இருப்போரை வெளிக்கொணர நாங்கள் முழு முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.
இதற்காகத்தான் இந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் ஒரு பகுதியாகத்தான் இந்த போராட்டங்கள் கொழும்பிலும் நடைபெறுகிறது.
இந்த சம்பவமானது இந்த நாடு ராணுவ ஆட்சியின் கீழ் செல்வதற்கான சிறந்த சாட்சியாகவே காணப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார்.