பொலிஸ் மா அதிபர் சி.டி விக்கிரமரத்னவின் பதவிக்காலம் நீடிக்கப்படுமா?

தற்போதைய  பொலிஸ் மா அதிபரான சி.டி விக்கிரமரத்னவுக்கு வழங்கப்பட்ட சேவை நீடிப்புகாலம்  இன்று முடிவடைய உள்ளது.

தற்போதைய ஐஜிபி சி.டி. விக்கிரமரத்ன பொலிஸ் சேவையில் இருந்து 2023 மார்ச் 26 இல் ஓய்வு பெறுவார் என முதலில் கூறப்பட்டிருந்த போதிலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் 6 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் அவரது பதவிக்காலத்தை ஜூன் 26 ஆம் திகதி வரை மூன்று மாதங்களுக்கு நீடித்திருந்த நிலையில் பின்னர் ஜூலை 9 ஆம் திகதி அவருக்கு பொலிஸ் மா அதிபராக மேலும் 3 மாத சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும், புதிய பொலிஸ் மா அதிபரை நியமிப்பதா அல்லது தற்போதைய பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்னவுக்கு வேறு சேவை நீடிப்பு வழங்குவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, விக்கிரமரத்ன மேலும் அதே நிலையில் தொடர்ந்து பணியாற்றுவார் என்று குறித்த  வட்டாரங்கள் கணித்துள்ளன.

புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால் இலங்கை  பொலிஸாருக்குள் சில முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக பல தரப்பினரும் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply