இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்து , மத்திய கிழக்கு நாட்டின் வடக்குப் பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறும் அவசரகால அறிவுறுத்தல்களை முறையாகப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியுள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அக்கோ, ஹைஃபா, திபெரியாஸ் மற்றும் நசரேத் நகரங்கள் தற்போது தாக்குதல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், மேற்குறிப்பிட்ட வடக்கு நகரங்களில் உள்ள இலங்கையர்கள், மருந்துகள் மற்றும் உணவு உள்ளிட்ட அன்றாடத் தேவைகளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இஸ்ரேலிய அரசாங்கம் இந்த பகுதிகளில் துருப்புக்களை அனுப்பியுள்ளதுடன் பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளதாக தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.