இலங்கையின் தற்போதைய அரசாங்கம் காலாவதியான பொருளாக மாறியுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது திருப்தியடைந்துள்ளதாகத் தெரிவித்த கிரியெல்ல, மக்கள் தேர்தலையே கோருவதாகவும், தேர்தலே நாட்டின் அவசரத் தேவை எனவும் தெரிவித்தார்.
தேர்தல் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை குழப்பி, சிக்கலாக்கி பிரச்சினைகளை உருவாக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.