மதுபான விற்பனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை!

வரிகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத அனைத்து மதுபானசாலை வியாபாரிகளின் அனுமதி பத்திரங்களும் இரத்து செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”

“மதுபான விலைகளை அதிகரித்து விட்டேன் என்று என்னுடன் சண்டையிடுகின்றார்கள்.

இந்த ஆண்டில் இரண்டு முறைகள் இருபது வீதத்தால் மதுபான விலைகளை அதிகரித்துள்ளோம்.

கடந்த 10 வருடங்களாக செலுத்தப்படாத வரிகளை இந்த வருடத்தில் மதுபான வியாபாரிகளிடம் இருந்து அறவிட்டோம்.
ஆகவே நிலுவை தொகைகள் இந்த ஆண்டில் செலுத்தாத வரிகள் போன்றவற்றை இந்த மாதத்தில் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த மாதத்திற்குள் அனைத்து வரிகளையும் செலுத்தி முடிக்காத மதுபான வியாபாரிகளின் அனுமதி பத்திரம் இரத்து செய்யப்படும்.

மதுபான வியாபாரிகளுக்கு கடுமையாக விதிக்கப்பட்ட நிபந்தனையாக இது வரலாற்றில் பதிவாகின்றது.

எந்த சந்தர்ப்பத்திலும் மதுபான வியாபாரம் நாட்டில் அபிவிருத்தி அடைவதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோம்.

இதன்மூலம் அரச வருமானங்களை பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒழுங்குமுறைகளை பின்பற்றி அதனை பெறுவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சாதாரண மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் இந்த தரப்பினருக்கு கிடைக்க மாட்டாது” என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply