குடிபோதையில் வாகனம் ஓட்டி பல வாகனங்களை மோதியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அவர் இன்று கல்கிசை மேலதிக நீதவான் சஞ்சய எல்.எம்.விஜேசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன 1லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அவர், கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நவம்பர் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, ஒக்டோபர் 28 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் ஓட்டிய போது, மரைன் டிரைவில் தனது வாகனத்தை மூன்று வாகனங்கள் மீது மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.