திருத்தப்பட்ட மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் கொழும்பில் பல பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே வழங்கிய நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, கொழும்பில் பல வீதிகள் ஊடாக ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை மற்றும் நிதி அமைச்சின் வளாகத்தை நோக்கி பேரணியாக செல்வது தடுக்கப்பட்டுள்ளது.
போராட்டங்களினால் பொது மக்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்கள் மற்றும் சொத்து சேத அபாயங்கள் குறித்து கொம்பன்ன வித்தியாலய பொலிஸார் முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை அமைதியான முறையில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, எந்தவொரு ஆர்ப்பாட்டக்காரர்களும் அமைதியான முறையில் செயற்படத் தவறும் பட்சத்தில் கைது செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.