நேபாளத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் குறைந்தது 128 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக இருந்ததாக நேபாளத்தின் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதுடன் பின்னர் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆகக் குறைத்ததாக ஜெர்மன் ரிசர்ச் சென்டர் ஃபார் ஜியோசயின்சஸ் தெரிவித்தது. அதனை தொடர்ந்து குறித்த நிலநடுக்கத்தினை அமெரிக்க புவியியல் ஆய்வு 5.6 ரிக்டர் என மதிப்பிட்டுள்ளது.
மேலும் 190,000 மக்கள்தொகை கொண்ட மலைப்பாங்கான மாவட்டமான நிலநடுக்கம் ஏற்பட்ட ஜாஜர்கோட்டின் மையப்பகுதிக்கு அருகில் உள்ள பகுதியில் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் புஷ்ப கமல் தஹல், நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமைச் சேதங்களுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்ததோடு, ட்விட்டர் என அழைக்கப்படும் சமூக ஊடகமான X இல் ஒரு பதிவில், உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தொடங்க பாதுகாப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.