இலங்கை வங்கியின் கிரிக்கெட் சங்க கணக்கிலிருந்து 2 மில்லியன் டொலர் பணத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் அதிகாரிகள் மீளப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தொடர்பில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அதிகாரிகளில் ஒருவர், வெளிநாட்டிற்கு சென்றுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சுதந்திர சதுக்கத்திலுள்ள அரச வங்கியிலுள்ள 2 மில்லியன் டொலர் பணத்தையே இவ்வாறு பெற்றுக்கொள்ள முயற்சித்து வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு காணப்படும் அதிகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை வினவுவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் முயற்சித்து வருகின்றமை தொடர்பில் ஊடகங்களின் ஊடாக அறிய முடிகின்றது எனவும் அமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.