சஜித்துக்கு இடையூறு செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும்! கிரியெல்ல கோரிக்கை !

பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்ற சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற 2024 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இடையூறு விளைவித்ததை தொடர்ந்து , சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சமகி ஜன பலவேகயவின் பாராளுமன்ற உறுப்பினர் குறித்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து அவையில் அமளி ஏற்பட்டதையடுத்து அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

இதேவேளை  பிரேமதாச, சபாநாயகரின் அனுமதியுடன் கேள்வி எழுப்பியதாக கிரியெல்ல எடுத்துரைத்ததுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும், கிரியெல்ல விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்து, இவ்விடயம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ ஆவணங்கள் அடங்கிய பைண்டரை நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply