இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதியிடம் கையளிப்பு !

இலங்கை தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஷங்ரிலா விடுதியில் நடைபெற்ற 2023க்கான இலங்கை பசுமை ஹைட்ரஜன் கருத்தரங்கு நிகழ்வில் வைத்து இன்று காலை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் இந்த வீதி வரைபடம் அரச தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நூற்றாண்டின் இறுதியில் வெப்பநிலையில் 3 டிகிரி அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டியதுடன், 2030 ஆம் ஆண்டளவில் வெப்பநிலை அதிகரிப்பை 1.5 டிகிரியாகக் கட்டுப்படுத்தும் இலக்குடன், காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்வதற்கான அவசரத்தையும் வலியுறுத்தினார்.

எரிசக்தித் திட்டங்களைத் தீர்மானிக்கும் போது பொருளாதார காரணிகள், விலை மற்றும் நீண்டகால தாக்கங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு முழுமையான பார்வையை எடுத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, முடிவெடுப்பதற்கு வழிகாட்டுவதற்கு ஒரு ஆற்றல் மாற்றம் சட்டம் மற்றும் பல-நிறுவனக் குழுவை நிறுவ அவர் முன்மொழிந்தாதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை , சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சி உடன் இணைந்து குறித்த கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply