போலி முகநூல் பாவனையாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனை!

போலியான முகநூலை திறந்து, அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை போலியாக நிர்வாணப்படுத்தி, பதிவிட்ட நபருக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்சா தீர்ப்பளித்தார்.

நேற்றையதினம் அக்கரைப்பற்று நீதிமன்றில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேக நபருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது.

சந்தேக நபர் வெளிநாடொன்றில் இருந்தபோது பெண்ணொருவரின் புகைப்படத்தை நிர்வாணப்படுத்தி முகநூலில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாட்டினை கையளித்திருந்தார்.

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நபர் வெளிநாட்டிலிருந்து வருகை தந்தபோது விமான நிலையத்தில் வைத்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கைதான நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவர் குற்றவாளி என்பதை ஆதாரபூர்வமாக நீதிமன்றில் உறுதிப்படுத்திய நிலையிலேயே இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply