கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி பெரலிய புகையிரத நிலையத்தில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த புகையிரத பயணிகள் மற்றும் புகையிரத ஊழியர்களின் நினைவாக இன்று காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த வரை விசேட புகையிரத பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நினைவேந்தல் ரயில் இன்று காலை 6.25 மணிக்கு மருதானை புகையிரத நிலையத்தில் இருந்தும், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காலை 6.50 மணிக்கும் புறப்பட்டுள்ளது.
2004 இல் பெரலிய ரயில் நிலையத்தில் சுனாமி விபத்தில் சிக்கிய ரயிலின், 591 ரயில் எஞ்சின் இலக்கத்துடன் இன்றைய ரயில் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கோட்டை புகையிரத நிலைய அதிகாரிகளும் ரயிலுக்குள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
சுனாமி நினைவிடத்தில் பயணிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்துவதற்காக பெரலிய ரயில் நிலையத்தில் பத்து நிமிடங்களுக்கு ரயில் நிறுத்தப்படும்.