சர்ச்சைக்குரிய விஸ்வ புத்தாவுக்கு பிணை!

பௌத்த மதத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரத்தினபுரியை சேர்ந்த விஸ்வ புத்தாவை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபருக்கு எதிராக சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்த முடியாது என நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், குற்றவியல் புலனாய்வு திணைக்களம் சந்தேகநபரை குற்றவியல் சட்டத்தின் 290 வது பிரிவின் கீழ் விசாரணை செய்ய முடியும் என நீதவான் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சந்தேகநபரான விஸ்வ புத்தாவை, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், முறைப்பாட்டை மார்ச் 27 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கவும் உத்தரவிட்டார்

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply