நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்,
“நான் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளேன். நான் ஏற்கனவே அதை அனுபவித்து விட்டேன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது நல்லது, இது மக்களின் கோரிக்கையும் கூட என்பதை உணர்ந்தேன்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தேர்தலையும் ஒத்திவைக்கும் சதியாக இருக்கலாம் எனவும் அது சாத்தியம் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலாக இருந்தாலும் சரி, பொதுத் தேர்தலாக இருந்தாலும் சரி, எதிர்வரும் தேர்தல்களில் தமது கட்சி வெற்றிபெறும் என முன்னாள் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.