யாழ்ப்பாணம் நாவாந்துறை சந்தையில் நடக்கும் அநியாயம் கண்டுகொள்ளாத மாநகரசபை!

யாழ் மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள நாவாந்துறை மீன் சந்தையானது யாழ்ப்பாணத்தின் மிக முக்கியமான மீன்சந்தையாகும் .

இங்கு மரக்கறிகள், இறைச்சி வகைகள், மீன்கள் விற்பனை நிலையம் என பலதரப்பட்ட விற்பனை நிலையங்கள் காணப்படுகிறது .

அத்தோடு இப்பகுதி அதிகளவான மக்கள் ஒன்று கூடும் சந்தை தொகுதியாகவும் காணப்படுகிறது . ஆனால் இந்த மீன் சந்தையானது போதிய பராமரிப்பு வசதிகள் இன்றி காணப்படுகின்றதாக பிரதேச மக்களும் வியாபாரிகளும் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் பலமுறை மாநகர சபைக்கு தெரியப்படுத்தியும் அவர்கள் கண்டுகொள்ளாது கடந்து செல்வதாக வியாபாரிகளும் பிரதேச மக்களும் குற்றம் சுமத்தியுள்ளனர் .

மேலும் மீன் சந்தையில் போதிய சுத்திகரிப்பு மற்றும் கழிவகற்றல் பணிகள் இடம்பெறாமையால் இங்கு துர்நாற்றம் வீசுவதுடன்  புழுக்கள் உருவாகி விற்பனை நிலையங்களுக்குள்ளும் புகுந்துள்ளன.

இதனால் பலவகையான தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாகவும்
இதன் காரணமாக சந்தைக்கு  வரும் நுகர்வோர் தற்போது அங்கு வருவதை  தவிர்த்து வருவதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர் .

அத்தோடு மாநகர சபையால் உருவாக்கி கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான மலசல கூட வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் வடிகாலமைப்பு வசதிகள் அத்தனையும் அற்ற நிலையில் இந்த சந்தை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்தோடு வியாபாரிகள் தாங்களாக முன்வந்து சந்தைத் தொகுதியை துப்பரவு செய்ய முயற்சித்தாலும் நீரிறைக்கும் இயந்திரம் இன்மையால் துப்பரவு பணிகளை செய்ய முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே சுத்தப்படுத்தாமல் கைவிடப்பட்ட வடிகாலமைப்புக்களையும், நீர்  வசதி மற்றும் மலசலக்கூட வசதிகளையும், உரியமுறையில் கழிவுகளை அகற்றுவதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருமாறு உரிய அதிகாரிகளை வியாபாரிகள்  கேட்டுக்கொள்கின்றனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply