இந்த மாதம் முதல் பள்ளி மாணவிகளுக்கு செனிடரி நாப்கின்களை இலவசமாக வழங்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நேற்றையதினம் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் முன்வைக்கப்பட்ட குறித்த திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மிகவும் பின்தங்கிய பாடசாலைகள், பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகள், தனிமைப்படுத்தப்பட்ட பாடசாலைகள், தோட்டப் பாடசாலைகள், மற்றும் வறுமையில் உள்ள நகர்ப்புற பாடசாலைகளில் கல்விகற்கும் 800,000 மாணவிகளுக்கு ஏப்ரல் 2024 முதல் ஆண்டுதோறும் இலவச சுகாதார செனிட்டரி நாப்கின்கள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான கல்வி அமைச்சரின் முன்மொழிவுக்கு இவ்வாறு அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமிகளுக்கு 1,200 ரூபா பெறுமதியான வவுச்சர்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.