வைத்தியர்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்!

நாட்டில் செயற்படும் போலி வைத்தியர்கள் மற்றும் சட்டவிரோத மருத்துவ நிலையங்கள் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து வைத்தியர்களும் இலங்கை மருத்துவ சபையில்  தம்மைப் பதிவு செய்வது கட்டாயமாகும், அதேவேளையில் தனியார் மருத்துவ நிறுவனங்கள் மாகாண மட்டத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், நாடளாவிய ரீதியில் பல பதிவு செய்யப்படாத வைத்தியர்கள் மற்றும் வைத்திய நிலையங்கள் இயங்குவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த விடயம் தொடர்பில் உடனடி விசாரணைகளை ஆரம்பிக்குமாறும், பதிவு செய்யப்படாத அனைத்து வைத்தியர்கள் மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனைத்து மாகாண மற்றும் மாவட்ட மட்ட அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, அத்தகைய தகுதியற்ற வைத்தியர்கள் தொடர்பில் தகவல்களை வழங்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களையும் கேட்டுக் கொள்கிறது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply