டெங்கு நோய் அபாயம்- சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை எச்சரிக்கை!

நிலவும் மழை நிலைமை காரணமாக டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் அறிக்கையின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோயாளர்களில் மேல் மாகாணத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றுள் கொழும்பு நகர்ப் பகுதியிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, குருநாகல், காலி போன்ற பிரதேசங்கள் டெங்கு பரவும் பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் நீடித்தால் அவர்கள் ஆரம்பம் முதலே ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: larshi mano

Leave a Reply