ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளகக் கலந்துரையாடல்களின்படி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பெரும்பான்மையினரால் தம்மிக்க பெரேராவின் பெயரை முன்மொழிந்துள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது வேட்பாளர் தம்மிக்க பெரேராவை உத்தியோகபூர்வமாக எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கவுள்ள நிலையில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.