இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது.இந்தோனேசியா சுமத்ரா தீவில் 260 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். தீவின் இருபுறமும் பசிபிக் நெருப்பு வளையம் உள்ளதால் இங்கு பூகம்பங்கள், சுனாமிகள் மற்றும் எரிமலை வெடிப்புகள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. இங்கு, எந்நேரத்திலும் வெடிக்கக்கூடிய வகையில் 120 எரிமலைகள் உள்ளன.

இந்நிலையில் இன்று தீவில் உள்ள மவுண்ட் சினாபங்க் எரிமலை வெடிக்கத் துவங்கியுள்ளது; 16,400 அடி உயரத்திற்கு சாம்பல் துகள்கள் பறந்தன. இதனால் 5 கி.மீ., தொலைவுவரை உள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வெளியேற வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த சில வருடங்களில் மட்டும் எரிமலை வெடிப்பால், 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இப்பகுதியிலிருந்து வெளியேறி உள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir