N 95 முகக்கவசத்தை சாதாரண குக்கரிலேயே கிருமி நீக்கம் செய்யலாம்

சாதாரண குக்கர் அல்லது மின்சார குக்கரிலேயே, 50 நிமிடங்கள் உலர் வெப்பத்தில் வைத்து, ‘என்.95′ ரக முகக்கவசங்களை கிருமிநீக்கம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம்’ என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

கொரோனா தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுப்பதில் முகக்கவசம் முக்கிய பங்காற்றுகிறது. அதில் என்.95 ரக முகக்கவசம் மிகச்சிறிய திரவ துளிகள் வழியாக கொரோனா பரவுவதை தடுப்பதில் சிறப்பாக செயல்படுகிறது.

இந்நிலையில், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கடிதங்கள் இதழில் வெளியாகியுள்ள கட்டுரையில், ‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடியதாக கருதப்பட்டும் என்.95 ரக முகக்கவசங்களை குக்கரில் கிருமிநீக்கம் செய்து பாதுகாப்பாக மீண்டும் பயன்படுத்தலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவின் இல்லினாய்ஸ் அர்பானா சாம்பேன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு குழு உறுப்பினரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான விஷால் வர்மா தெரிவித்துள்ளதாவது:

முகக்கவசத்திற்கான தேவை அதிகரிப்பால், சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு முகக்கவசம் கிடைப்பதில் பற்றாக்குறை நிலவுகிறது. கிருமிநீக்கம் செய்வதற்கு பல வழிகள் உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பில்டர் அல்லது என்.95 முகக்கவசத்தின் தன்மையை அழிக்கும். சாதாரன குக்கர், எலெக்ட்ரிக் குக்கரில் உலர்ந்த வெப்பத்தில் கிருமி நீக்கம் செய்யும் முறை சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முதல்முறை பயன்படுத்துவோருக்கு பயனுள்ளதாக இருக்கும்.

குக்கரில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல், சிறிய துணியை வைத்து அதன்மேல் முகக்கவசத்தை வைத்து, 100 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையை 50 நிமிடங்கள் வரை இருக்கும்படி செய்ய வேண்டும். புற ஊதா கதிர்களை விடவும், ஒரு கொரோனா வைரஸ் உட்பட நான்கு வெவ்வேறு வகை வைரஸ்களிலிருந்து, உள்ளேயும் வெளியேயும் முகக்கவசத்தை தூய்மைப்படுத்திவிடலாம். ஒரு முகக்கவசத்தை சுமார் 20 முறை எலெக்ட்ரிக் குக்கரில் கிருமிநீக்கம் செய்யலாம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir