பொலிஸாரின் இடமாற்றம் குறித்தும், பொலிஸ் ஆணைக்குழுவின் தற்போதைய செயற்பாடுகள் குறித்தும் அறிவுறுத்துவதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றிருந்தது.
இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழு தனது கடமைகளை சட்டப்பூர்வமாக மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதிக்கு தெரிவித்திருந்தது.
இதன்போது, பொலிஸ் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் நடவடிக்கைகளில் எந்த செல்வாக்கும் செலுத்தப்படாது என்றும் உறுதியளித்துள்ளார்.