‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டம் ஜனவரியில் நடைமுறைக்கு வருகிறது!

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) என்ற திட்டம் முறையான சுகாதார சூழலை உருவாக்குதல், இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல், டிஜிட்டல் மயமாக்கல் உள்ளிட்ட புதுமையான கொள்கைகளுடன் பல வழிகளில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில், ஜனவரி மாதம் முதலாம் திகதி இத்திட்டம் உத்தியோகபூர்வமாக நடைபெறவுள்ளதாக தெரியவருகிறது.

புதிய ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி கடமைகளை ஆரம்பிக்கும் போது அரச பணியாளர்கள் வழங்கும் உறுதிமொழி இம்முறை வேறுபட்டதாக இருக்கும் எனவும், அரசாங்கத்தால் அன்றைய தினம் ஆரம்பிக்கப்படும் ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) திட்டத்துடன் இணைக்கப்பட்ட உறுதிமொழியாக அமையும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், முதற்கட்டமாக ‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அதனை மேலும் அர்த்தமுள்ளதாக்குவதற்கும் அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply