
சட்டவிரோதமாக தொல்பொருள் அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர்கர் இருவர் வெலிகந்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகஸ்தென்ன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெலிகந்த பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, வெலிகந்த பகுதியைச் சேர்ந்த 47 மற்றும் 50 வயதுடைய இரு சந்தேக நபர்கள் நேற்று (2) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது குறித்த மேலதிக விசாரணைகளை வெலிகந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.