
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் மீண்டும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இலங்கையின் 77ஆவது சுதந்திர தின கொண்டாட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றிருந்தது.
இந்த நிகழ்வில் தேசியக் கொடி ஏற்றப்படும் போது, சிங்கள மொழி மூலம் தேசிய கீதம் இசைக்கப்பட்ட நிலையில், அணிவகுப்புக்கள் அனைத்தும் முடிவுற்ற பின்னர் தமிழ் மொழி மூலமும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்ட பின்னர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கும் முறை நிறுத்தப்பட்டது.
எனினும் தற்போதுள்ள புதிய அரசாங்கமான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் ஆட்சியில் மீண்டும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.