
நெல் கிலோ ஒன்றின் விலை தொடர்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (05) வெளியிடப்படும் என விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இன்று காலை 11 மணியளவில் விவசாய அமைச்சில் ஊடக சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில், அதன்போது நெல் விலை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஒரு கிலோ நெல்லின் உற்பத்தி செலவுடன் 30 வீதம் சேர்க்கப்பட்டு இந்த புதிய விலை அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்த பிரதி அமைச்சர், விவசாயிகள் சார்பாக பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கைகள் இதன் மூலம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன் அரசாங்கம் நெல் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், அதற்காக தற்போது வரையில் 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் நாமல் கருணாரத்ன கூறினார்.