
இலங்கையிலிருந்து சுமார் 7,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்துள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
2025 வரவு செலவுத் திட்டம் மூலம் வைத்தியர்களுக்கான உரிமைகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 7,000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே 2,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் பணியாற்றி வரும் நிலையில், மேலும் 5,000 வைத்தியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற்றுள்ளதாகவும் வைத்தியர் பிரபாத் சுகததாச தெரிவித்துள்ளார்.