நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன உரிமம் வழங்குவது தொடர்பில் முன்வைக்கவுள்ள பிரேரணை!

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரசாங்க வாகனங்கள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற முன்மொழிவை எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஒன்று தனிநபர் உறுப்பினர் பிரேரணையாக முன்வைக்க உள்ளது.

புதிய நாடாளுமன்ற முன்மொழிவின்படி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் போக்குவரத்தை தாங்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டது.

அரசாங்கம் ஏற்கனவே வாகன உரிமங்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ள நிலையில், அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழு ஒன்று இந்த முன்மொழிவை தனிநபர் உறுப்பினர் பிரேரணையாக முன்வைக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply