உலகம் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கும் அமெரிக்க சனாதிபதித் தேர்தல் இறுதி நேர எதிர்பார்ப்பைப் போல திகில் திருப்பங்களை நோக்கி நகர்ந்தவண்ணம் உள்ளது.
யார் வெற்றி பெற்றார் என்பதற்கான முடிவிற்கான காத்திருப்பு நீண்டு செல்கிறது. மூன்று மாநிலங்கள் ஈற்றில் தீர்மானிக்கும் மாநிலங்கள் ஆகியுள்ளன.
கடந்த 2016 சனாதிபதித் தேர்தலுடன் ஒப்பிடுமிடத்து பெரிதாக எந்தவொரு மாநிலத்திலும் முடிவுகள் மாறவில்லை ஆனால் அரிசோனா மாநிலத்தை மட்டும் ரம் தற்போது இழந்துள்ளார் என கனடாவில் உள்ள அரசியல் ஆய்வாளர் நேரு குணரெட்னம் அவர்கள் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
வட கரலைனா மற்றும் ஜோஜியா ஆகிய மாநிலங்களில் ரம் முன்னிலையில் இருந்தாலும் நெருங்கிய போட்டி உள்ளதால் காத்திருப்பு தொடர்கிறது.
கடந்தமுறையும் ரம் வெற்றி பெற்ற இம் மாநிலங்களில் ஈற்றில் ரம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அவர் தனது சனாதிபதிப் பதவியை தக்கவைத்துக் கொள்ள இவ்விரண்டு மாநிலங்களையும் ஈற்றில் வெல்வது தற்போதைய நிலையில் அவசியம்.
இந்நிலையில் ரம் கடந்தமுறை வெற்றி பெற்ற மிச்சிகன்இ விஸ்கொன்சின் மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் இரண்டை வெற்றி பெறுவது அவசியமாகிறது. வட கரலைனா மற்றும் ஜோஜியாவில் ஒன்றை இழந்தாலும் மேற்க்கணட மூன்று மாநிலங்களையும் வெல்வது அவசியமாகும். மறுபுறத்தில் ஜோ பைடன் சனாதிபதியாக வேண்டும் என்றால் மிச்சிகன், விஸ்கொன்சின் மற்றும் பென்சில்வேனியா ஆகிய மாநிலங்களில் இரண்டை வென்றாக வேண்டும். இல்லையேல் வட கலலைனா மற்றும் ஜோஜியாவில் ஒன்றுடன் மேற்க்கண்ட மூன்றில் ஒன்றையும் வென்றாக வேண்டும்.
தற்போது மேற்க்கண்ட ஜந்து மாநிலங்களிலும் முன்னணியில் உள்ள ரம்பிற்கான வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் என்றே கூறலாம். ஆனால் பென்சில்வேனியாவே ஈற்றில் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மாநிலம் ஆனால் அதன் வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்க இன்னும் மூன்று நாட்கள் ஆகலாம் என்ற நிலையில் காத்திருப்பும் குழப்பமும் அதிகரிக்கலாம்.
மறுபுறத்தில் 100 ஆசனங்களைக் கொண்ட செனட் சபையை ரம்பின் குடியரசுக்கட்சி மீண்டும் தக்க வைக்கும் வாய்ப்புக்கள் அதிகம் என்றே சொல்லாம். 53 இற்கு 47 என்ற நிலையில் இறக்கம் ஏற்ப்பட்டாலும் செனட் சபை குடியரசுக்கட்சி வசமே தொடரலாம். மறுபுறத்தில் 435 ஆசனங்கரளக் கொண்ட கீழ்ச்சபை தொடர்ந்தும் சனநாயகக்கட்சி வசமே இருக்கப் போகிறது.
ரம் மீது எவ்வளவு விமர்சனப் பார்வை இருந்தாலும் தேர்தல் களத்தில் மக்களின் பலவீனங்களை அறிந்து அதற்கேற்ற பிரச்சார யுக்தியுடன் அவர்களை வென்றெடுப்பதில் வல்லவர் என்பதை வெற்றி தோல்விகளைக் கடந்தும் நிரூபித்துள்ளார் என அடித்துச் சொல்லாலம். வழமையான பிரச்சார யுக்திகளில் இருந்து விலகி அதிரடி அரசியல் கை கொடுக்கும் என்பது அவரிடம் இருந்தான அரசியல் படிப்பினையாகச் சொல்லாம்.
அதேவேளை தொடர்ந்த எண்ணப்படும் வாக்குகள் தனக்கு பாதகமாக அமையும் நிலை ஏற்ப்பட்டால் அதை எவ்விதத்திலும் தடுத்துவிட் அனைத்து மயற்சிகளிலும் ரம் இறங்குவார் என்பதற்கு அச்சாரமாக தற்போதே என்னிடம் இருந்து வெற்றியை தட்டிப்பறிக்க சதி செயகின்றனர் என முழங்க ஆரம்பித்துவிட்டார். இது முடிவுகளுக்கு முன்னரான குழப்பங்களை மேலும் அதிகரிக்கும் என்பதே களநிலை.
ஆக மொத்தத்தில் இறுதி முடிவுகளுக்கான காத்திப்பு தொடரும் இவ்வேளையில் தேர்தல் எதிர்பார்ப்பில் கழுதையை சின்னமாகக் கொண்ட சனநாயகக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதே யதார்த்தமாகும்.