கடந்த ஆகஸ்டில், அல் – குவைதா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர் ஒருவர், இஸ்ரேல் படையினரால், ஈரானில் கொல்லப்பட்டதாக, அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அந்த தகவலை, ஈரான் அரசு நேற்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ஈரானில், அல் – குவைதா பயங்கரவாதிகள் ஒருவர் கூட இல்லை என்றும், ஈரான் நாட்டை, பயங்கரவாதிகளுடன் தொடர்புபடுத்தி கூறுவதை, அமெரிக்காவும், இஸ்ரேலும் வழக்கமாக வைத்துள்ளதாகவும், ஈரான் வெளியுறவுத் துறை குற்றஞ்சாட்டியது.