உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.59 கோடியாக உயர்ந்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 55,932,699 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 38,949,441 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 13 லட்சத்து 42 ஆயிரத்து 928 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 15,640,343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1,00,721 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-அமெரிக்கா – பாதிப்பு – 11,694,161, உயிரிழப்பு – 254,243, குணமடைந்தோர் – 7,083,115இந்தியா – பாதிப்பு – 8,912,704, உயிரிழப்பு – 131,031, குணமடைந்தோர் – 8,333,013பிரேசில் – பாதிப்பு – 5,911,758, உயிரிழப்பு – 166,743, குணமடைந்தோர் – 5,361,592பிரான்ஸ் – பாதிப்பு – 2,036,755, உயிரிழப்பு – 46,273, குணமடைந்தோர் – 143,152ரஷியா – பாதிப்பு – 1,971,013, உயிரிழப்பு – 33,931, குணமடைந்தோர் – 1,475,904கொலம்பியா – பாதிப்பு – 1,211,128, உயிரிழப்பு – 34,381, குணமடைந்தோர் – 1,118,902