சாவகச்சேரி வைத்தியசாலையில் உயிரிழந்தவரின் பி.சி.ஆர். முடிவு

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 47 வயதுடைய ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பளையைச் சேர்ந்த ஒருவர் காய்ச்சல் காரணமாக சாவகச்சேரி வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் அவர் இன்று திடீரென உயிரிழந்தார்.

இதனால், அவரது சடலத்தில் மாதிரிகள் இன்று காலை பெறப்பட்டு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. எனினும், அவருக்கு தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir