தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் தப்பிசென்ற பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இரத்தினபுரி-எஹெலியகொட பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தனது இரண்டரை வயது மகனுடன் குறித்த பெண் நேற்று முன்தினம் இரவு தப்பியோடியிருந்தார்.

இந்நிலையில், பெண்ணைக் கண்டுபிடிக்க புலனாய்வுப் பிரிவினரின் உதவியுடன் விசாரணை மற்றும் தேடுதல் இடம்பெற்று வந்தநிலையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த பெண் மகனுடன் பேருந்தில் தனது ஊருக்குச் சென்றுள்ளதுடன், அங்குள்ள உறவினர் ஒருவருர் வீட்டில் மகனை ஒப்படைத்து விட்டு அங்கிருந்து சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir