வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்

வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 93 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

டுபாயிலிருந்து 52 பேர், கட்டாரிலிருந்து 41 பேர் உள்ளிட்ட 93 பேர் நாடு திரும்பியுள்ளனர் என்று கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

நேற்று கட்டாரின் டோஹா நகரிலிருந்து 41 பேர் வருகை தந்துள்ளனர்.

அத்துடன், ஐக்கிய அரவு இராச்சியத்தின் டுபாய் நகரிலிருந்து 52 பேர் நாடு திரும்பியுள்ளனர்.

இவ்வாறு நாடு திரும்பிய அனைவரும், முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir