வெளிநாடுகளில் இருந்து 188 பேர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 188 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதன்படி, இன்று அதிகாலை 12.45 மணியளவில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 50 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று அதிகாலை 1.45 மணியளவில், கட்டாரிலிருந்து 48 பேர் கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இன்று அதிகாலை 5.25 மணியளவில் தோஹாவிலிருந்து 90 பேர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவ்வாறு நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனைவரும் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir