பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான மஞ்சளுடன் இருவர் கைது

பத்து இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு தொகை மஞ்சளுடன் சந்தேக நபர்கள் இருவரை புத்தளம் வலய குற்ற மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இராணுவத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலைத் தொடர்ந்தே குறித்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து 232 கிலோகிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகையுடன் சந்தேக நபர்கள் ஜூப் ரக வாகனமொன்றில் பயணித்துக்கொண்டிருந்த போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir