மாவீரனின் சகோதரனின் வீடு இராணுவத்தால் சுற்றிவளைப்பு!

இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணியின் செயலாளரும் மாவீரர் ஒருவரின் சகோதரருமான பீட்டர் இளஞ்செழியன் என்பவரது வீட்டில் தனது சகோதரனுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வரும் நிலையில் முல்லைத்தீவு மணற்குடியிருப்பு பகுதியில் உள்ள அவரின் வீட்டை சுற்றி நூற்றுக்கணக்கான இராணுவம் காவல்துறையினர் ,விசேட அதிரடிபடையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

தனது வீட்டின் உள்பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடிகளை கட்டி உயிரிழந்த தனது சகோதரனின் திருவுருவ படத்துக்கு சுடரேற்றி அஞ்சலிக்கு தயாராகி வரும் நிலையில் இராணுவம் சுற்றி வளைந்துள்ளது இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகின்றது .

You May Also Like

About the Author: kalaikkathir